Youth as Catalysts and Change Makers Book

 

Vazhikattum Valluvan Book

.................................................................................................

Capacity UTILIZATION

.......................................................................................................................................................................................................................................................................

குடிநீர் மேல்நிலைத் தொட்டி :

எந்த ஒரு திட்டம் போட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த ஆவன செய்யவேண்டும். இல்லை என்றால் எந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தினாலும் அத்திட்டம் நீண்ட கால பயன்தாரது. எனவே திட்டம் போடும் போதே நீண்ட கால தேவையை கணக்கிட்டு செயல்படுத்தவேண்டும்.

விருத்தாலம் நகராட்சியின் மக்கள் தொகை 60 ஆயிரமாக இருப்பது அடுத்த 15 வருடங்களில் மக்கள் தொகை சுமார் 95,000 ஆக உயரும் என்பதை கணக்கிட்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென்ற  நோக்கத்தில் செயல்பட்டார்.

இதற்கு முன்பு நகராட்சியில் தொலைநோக்குப்பார்வையில் செயல்படாத காரணத்தால் குடிநீர் பற்றாக்குறை. அதுவும் கோடை காலங்களில் கேட்கவே வேண்டாம். குடிநீர் பற்றாக்குறை என்பது நீண்ட நெடுங்காலமாக உள்ள பிரச்சனை எனவே தொலைநோக்குப்பார்வையில் இப்பிரச்சனையைப் போக்க முடிவெடுத்தார் நகர்மற்றத்தலைவர்.

நகரில் உள்ள பழைய ஐந்து மேல்நிலையத்தொட்டியின் பயன்பாடு 100 சதவீதத்திலிருந்து 150 சதவீதமாக தீர்மானிக்கப்பட்டது. அவைகளின் பயன்பாட்டை கூட்டும் விதத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியில் மேலும் ஒரு மோட்டார் இணைத்து. அதிலிருந்து மேலும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக மொத்தம் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கலாம் என்று எண்ணி, அதற்கானவற்றை செய்து முடித்தார். அதன்படி ஜங்க்ஷன் ரோடு, அண்ணாநகர், பெரியார் நகர் வடக்கு, பெரியார் நகர் தெற்கு மற்றோரிடம் என ஐந்து குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளை மேற்படி முறையில் செய்ய தீர்மானமிட்டு அதன்படி ஜங்க்ஷன் ரோடு, அண்ணாநகர், பெரியார் நகர் வடக்கு, பெரியார் நகர் தெற்கு, செய்து முடிக்கபட்டது (மற்ற இரண்டும் செய்ய முடியாததற்கு நகராட்சி நிர்வாகம் ஒத்துழைக்காததது தான் ) இதனால் ஒரு மேல்நிலைத்தொட்டி கட்டும் செலவும், பராமரிப்பு செலவும் இல்லாத துடன் குறைவான செலவில் 50 சதவீதம் கூடுதலான பயன் கிடைத்தது. காலையிலும் மாலையிலும் காலை 2 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இணைத்து அதிலிருந்து மேலும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக மொத்தம் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கலாம் என்று எண்ணி, அதற்கானவற்றை செய்து முடித்தார். அதன்படி ஜங்க்ஷன் ரோடு, அண்ணாநகர், பெரியார் நகர் வடக்கு, பெரியார் நகர் தெற்கு மற்றோரிடம் என ஐந்து குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளை மேற்படி முறையில் செய்ய தீர்மானமிட்டு அதன்படி ஜங்க்ஷன் ரோடு, அண்ணாநகர், பெரியார் நகர் தெற்கு, செய்து முடிக்கபட்டது (மற்ற இரண்டும் செய்ய முடியாததற்கு நகராட்சி நிர்வாகம் ஒத்துழைக்காததது தான்) இதனால் ஒரு மேல்நிலைத்தொட்டி கட்டும் செலவும், பராமரிப்பு செலவும் இல்லாததுடன் குறைவான செலவில் 50 சதவீதம் கூடுதலான பயன்கிடைத்தது.

காலையிலும் மாலையிலும் காலை 2 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதே வேளையில் இரண்டு மோட்டார்களையும் இயக்குவதால் 2 மணி நேரத்தில் கூடுதலாக 1 லட்சம் லிட்டர் மணிக்கு 50 ஆயிரம் விட்டர் வரை கிடைக்கிறது. அதாவது 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியின் மூலம் 3 லட்சம் லிட்டர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்க முடிந்தது .

இன்னும் நான்கு மேல்நிலைத் தொட்டிகள் கட்ட தமிழ்நாடு அரசு ரூ .135 / - லட்சம் ஒதுக்கியது . இதற்காக 24.08.2003ல் நகரமன்ற முலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் 2016 ஆண்டு வரை இந்நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு வாராது என்பது மிகப்பெரிய சாதனை.

Achieve By Honesty : Dr.M.Valluvan No. 88 mariyamman kovil street Vriddhachalam - 606 001   - Email : drmvalluvan@ yahoo.com