Youth as Catalysts and Change Makers Book

 

Vazhikattum Valluvan Book

.................................................................................................

Income Resources

.......................................................................................................................................................................................................................................................................

நகராட்சி வருவாயும் பணியும் :

நகராட்சிக்கு ஆண்டு குத்தகை, வார காய்கறி சந்தை, வார கால்நடை சந்தை, தினசரி காய்கறி அங்காடி, கட்டணகழிவறைகள், பேருந்துநிலையவசூல் போன்றவற்றின் மூலமும், நகராட்சி கடைகள் மற்றும் பெட்டி(பங்க்)கடைகளின் வாடகை, மர மகசூல் குத்தகை, மீன் வளர்ப்பு   ஆகியவற்றாலும் முத்திரைத்தாள்கட்டணம், கேளிக்கைவரி, கனிமவரி, அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் தொழில்கள் மூலமாக தொழில்வரி, State Finance Commission மூலம் கால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வீதம் ஆண்டுக்கு சுமார் ரூ.60 லட்சம் வருமானம். ஆண்டு உரிமக்கட்டணம் (Licence Fee) சொத்துவரி, குடிநீர்வரி, காலிமனைவரி (Vacant Site Tax) அங்கிகரீக்கப்பட்ட மனைப்பிரிவு கட்டணம் (Plan Approval Fees) மனைப்பிரிவு (Layout) கட்டணம், BSNL, Airtel, Aircel, Reliance போன்ற தொலைத்தொடர்பு நிுவனங்களினால் நகராட்சி எல்லைக்குள் பதிக்கப்பட்டுள்ள Cell Tower பொருத்துக் கட்டணத்தாலும், இதர நிதிகளான NSD தேசிய குடிசை பகுதி மேம்பாட்டு நிதி, வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரண நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் நிதி, மாவட்ட ஆட்சியர் நிதி, சிறப்பு திட்டங்கள் மூலம் அவ்வப்போது ஒதுக்கப்படும் நிதி போன்றவை நகராட்சிக்கு கிடைக்கிறது.

இவற்றை சரியான முறையில் வரி வசூல் செய்தும், மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியையும் வைத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிவிடலாம். மக்களுக்கு நன்மை செய்யும் தீர்மானங்களை நிறைவேற்றுவது நகரசபை. அதை அமுல்படுத்தும் நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமின்றி நிறைவேற்ற வேண்டும்.

ஒரு நகராட்சியில் எல்லா குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வசதி, சுகாதாரம் , மின் விளக்கு வசதி, கழிவுநீர்க்கால்வாய், சாலைவசதி என ஐந்து தீர்மானங்களையும் நிறைவேற்றி செயல்படுத்தினாலே போதும் 5 வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து தன்னிறைவு பெற்ற நகரமாக மாறிவிடும்.

Achieve By Honesty : Dr.M.Valluvan No. 88 mariyamman kovil street Vriddhachalam - 606 001   - Email : drmvalluvan@ yahoo.com